உங்க காதலில் பிரிவிற்கு காரணம் என்னவென யோசிக்கிறீங்களா?

நீ என்னை நினைக்கவில்லை என்றால் நான் ஏன் உன்னை நினைக்க வேண்டும்? நீ என்னோடு பேசவில்லை என்றால் நான் ஏன் உன்னுடன் பேச வேண்டும்? இது போன்ற தன்முனைப்பு (EGO) காரணமாக உங்களுடைய காதல் காணாமல் சென்றுவிடும். இரண்டு நபர்களும் சில காலம் பிறிந்திருந்தால்தான் பாசம் புரியும் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். பிறிந்து வாழும் அந்த காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக உங்களை மறக்கவும் வாய்ப்புகள் உள்ளது.ஒரு சில நேரங்களில் உங்கள் அன்பானவர்களை வார்த்தைகளால் கொன்றுவிட்டு பிறகு அவர்களிடம் மன்னிப்பு கேட்டு ஒரு பிரயோஜனமும் இல்லை. “நாவினால் சுட்ட வடு” என்றைக்கும் ஆறாது இல்லையா? இதனால் ஏற்பட்ட வலி போகவும் போகாது , மனதிற்குள் அழியாமல் காலத்திற்கும் நினைவில் நின்றுவிடும்.உங்களின் காதலில் சண்டைகள் ஏன் அடிக்கடி வருகின்றது எனத் தெரியுமா? உங்களின் கோபம் (anger) மற்றும் தன்முனைப்பு (Ego) என்ற இந்த இரண்டு விஷயங்களால்தான். ஆகையினால் உங்கள் அன்பானவர்கள் மீது அன்பை மட்டும் காண்பியுங்கள், அது மட்டும் போதும் காதலுக்கு!