அட மனசே ! Please Calm down !

நம்ம மனசு இருக்கு பாருங்க
100 சதவீதத்துல 40 சதவீதம் பழச நினைக்கிறது ,
40 சதவீதம் எதிர்காலத்தை நினைக்கிறது ,ஏதோ 20 சதவீதம் சந்தோசம் ஆகிக்குது .
நேர்மறையான விசயங்கள யோசிக்க ரொம்ப யோசிப்போம் .
அதுக்கு காரணம் !
கெட்டத பார்க்கிறது ,கெட்ட விசயங்கள நினைக்கிறது , கெட்ட விசயங்கள கேட்கிறது .
உதாரணத்திற்க்கு இன்னைக்கு நல்ல விஷயங்களுக்கு எவ்ளோ நேரத்தை ஒதுக்கிருக்கிங்க ,
கேட்ட விஷயங்களுக்கு எவ்ளோ நேரத்த ஒதுக்கிருக்கிங்க ?
யோசிச்சு பாருங்க ..
நம்ம வாழ்க்கையில நிம்மதிய  தேடி போக வேணாம் ,
நம்ம கிட்ட தான் இருக்கு ,
ஒரு குட்டி challenge

காலையில எழுந்ததும் மொபைல் ஆ நோண்டாம
கொஞ்சம் கஷ்டம் தான் ஆனா அதான் challenge.
1 . உடற்பயிற்சி அல்லது தியானம் பண்ணலாம்
2. அம்மா க்கு ஏதாச்சும் உதவி பண்ணலாமே ( அவங்க வேணாம் னு சொன்னாலும் பிடிவாதமா நீங்க உதவி பண்ணுங்க )
ஏன்னா எத்தன ஊரடங்கு போட்டாலும் அவங்க வாழ்க்கையில எப்பவும் வேலை இருந்துட்டே தான் இருக்கும் .
3.வீட்ல பெரியவங்க இருந்தாங்கன்னா அவங்க கூட ஒரு 10 நிமிசமாச்சும் பேசணும் .
( யாரோ ஒருத்தங்க நமக்கு நேரத்த ஒதுக்கல – னு வருத்தப்படறத விட்டுட்டு,
நம்ம அன்புக்காக காத்துகிட்டு இருக்கிறவங்களுக்கு நேரத்த ஒதுக்கி சந்தோசமா இருக்கலாமே )
4.சத்தியமா நம்ம வாழ்க்கை ல ,ஏதோ ஒரு சாதனை பண்ணிருப்போம் , அத நினச்சு பார்த்து நம்மள நாமளே உத்வேக படுத்திக்கலாமே !
5. நேரம் ரொம்ப முக்கியமானது னு பெருசா advice பண்ண விரும்பல
அதே நேரத்தை சரியா பயன்படுத்திக்காம விட்டதுனால எவ்ளோ விசயம் இழந்துருக்கோம் னு யோசிப்போம் !
6.பொழுது போக்க பொழுதுக்கும் பயன்படுத்தாம
நம்ம வாழ்க்கைல பயனுள்ள விஷயத்துக்கு நேரத்த ஒதுக்க முயற்சி பண்ணுவோம் !

7.அப்புறம் இரவு
மறுபடியும் நகமும் சதையுமா
நீங்களும் உங்க மொபைலும் இல்லாம அத தள்ளி வச்சுட்டு கண்டத நெனச்சு மன குழப்பம் ஆகமா
ஒரு ஏழு மணி நேரமாச்சும் தூங்கணும்.

நல்லத நெனச்சு , நல்லத மட்டுமே பேசி , நல்ல விஷயங்களை மத்தவங்களுக்கும் சொல்லுவோம் !
Challenge க்கு ரெடி ஆ!
இத படிச்சதும் அட போமா னு அலட்சியமா இருந்தாலும் ok
படிச்சு முடிச்சு கொஞ்சம் மனசு மாறினாலும் சந்தோசமே !
– இந்த கட்டுரை பத்தின கருத்துக்களை RJ_Priyankaa அப்படிங்கிற Insta கிராமத்துல வந்து சொல்லலாம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *