எமனே கண்ணீர் சிந்துவான் ! உன் சாவை பார்த்து !

அன்பை அள்ளி வீசும் மிருகங்கள் மீது பாசத்தை மட்டும் காட்டாமல் , வாயில்லா ஜீவன்களுக்கு வைத்தியம் பார்க்கும் தொழிலை ரசித்து வாழ்ந்து கொண்டிருந்தாய்!

பாழாய் போன உனது மிதி வண்டி, உன் வீட்டின் அருகில் பழுது ஆகியிருக்க கூடாதா ?

உனது மருத்துவமனையில் பழுது ஆகிருக்க கூடாதா?

நடு ரோட்டில் பழுதான உன் மிதி வண்டியை பழுது பார்க்க வந்த கயவர்கள் , உன்னை கடத்தி , பலாத்காரம் செய்து ,

இன்னமும் ஆத்திரம் அடங்காமல் எரித்தே உன்னை கொன்றார்கள்.

  உன் சாவை பார்த்து எமனே கண்ணீர் சிந்துவான் .

ஒப்புக்கொள்கிறேன் மிருகங்களை விட மனிதன் கொடூரமானவன் தான் என்று.

4 thoughts on “எமனே கண்ணீர் சிந்துவான் ! உன் சாவை பார்த்து !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *