மதிப்பிற்குரிய மார்பகங்களுக்கும் வரி!!!

இன்னைக்கு பல விஷயத்துக்கு வரி கட்டறோம், சாப்பிட்றதுக்கு,போடுற துணிக்கு, சுங்க வரி னு சொல்லிட்டே போகலாம், ஆனா பெண்களோட மார்பகங்களுக்கு வரி கட்டுனத நீங்க கேள்வி பட்டுருப்பீங்களானு தெரியல!

திருவாங்கூர் ல
19 ஆம் நூற்றாண்டு ல சாதி கொடுமைகள் ஆதிக்கம் அதிகமா இருந்த காலம், ஆண்கள் மீசை வைப்பதற்கும் , அணிகலன்கள் அணிவதற்கு கூட வரி கட்டுனாங்க, அத விட கொடுமை பெண்கள் பொக்கிஷமா மதிக்கிற மார்பகளுக்கு வரி கட்டினங்கா!

உயர் சாதி மக்கள் இந்த கொடுமைய அனுபவிக்கல, மேலாடை இல்லனா வரி கட்ட தேவை இல்ல னு கொடூர சட்டங்கள் நம்ம முன்னோர்கள் அனுபவிச்சுருக்காங்க, கையில பணம் இல்லாததுனால
மேலாடை போடாம அவமான பட்ட பெண்கள் அதிகம் னு கூட சொல்லலாம். இப்படி இருக்கும் பொழுது ,

நாகேலி என்ற ஒரு பெண்ணிற்கு மார்பகங்களின் அளவு பெரிதாக இருந்தததால் இரட்டிப்பு வரி கட்ட வேண்டிய நிலைமை, இந்த கொடுமைகளை எத்தனை நாட்களுக்கு பொறுத்திருக்க முடியும் என்று எண்ணிய அந்த வீர பெண் வரி வசூல் செய்ய வந்த அதிகாரிகள் முன்னால் வாழை இலை வைத்து தன் இரண்டு மார்பகங்களை வெட்டி அவர்களுக்கு சமர்பித்தார்.

இவரின் வீரத்தையும் , ரத்த வெள்ளத்தையும் பார்த்த அரசு உடனடியாக அந்த சட்டத்தை கைவிட்டது
மானத்திற்காக போராடி இறந்து பெண்களின் மனதை வென்ற நாகேலி- யின் சரித்திர கதை இன்றும் பல பேருக்கு தெரியாது . இவரின் துணிச்சல் நடந்த இடம் கேரளா வில் உள்ள சேர்த்தலா,
முலசி பரம்பு-வில்
இப்போது மனோரமா காவலா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மானத்திற்காக, உயிரை மாய்த்த நாகேலி யின் கணவன் முதற் முறையாக உடன்கட்டை ஏறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மார்பகங்கள் மறைத்து சுதந்திரமாக , சந்தோசமாக சுற்றும் பெண்கள் சற்று நாகேலி யின் வீரத்திற்கு மரியாதை செலுத்தலாமே.