பங்காளிகளா அடிச்சி தூக்கலாமா ? “பேட்ட” க்கு போட்டியா ?

சினிமா நிகழ்ச்சிகள்ல அதிகமா தல காட்டுலனாலும் நம்ம “தல”ன்னாலே எப்பவுமே தனி கெத்துதான்.அவர் ஒரு “ட்ரெண்ட் ஸெட்ட்ர்”னு ஒவ்வொரு விஷயத்துலயும் நிரூபிச்சிக்கிட்டே இருக்காரு.ஏன்னா விவேகம் படத்துல கஷ்டப்பட்டு தன்னோட உடம்ப கட்டுக்கோப்பா கொண்டு வந்து நடித்து சிறநத ஒரு வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து அடுத்த படம் யார் கூட்டணியில செய்யப்போராருன்னு ரசிகர்கள் எல்லாம் எதிர்பார்த்துகிட்டு இருந்த நிலமையில மீண்டும் சிவா அவர்கள் இயக்கத்துல பொங்கலுக்கு “விஸ்வாசம்” மூலமாக தெறிகக விடப்போறாரு.
அதெல்லாம் சரி , இந்த டீசர் எப்ப வரும்? வருமா இல்ல வராதானு எல்லாரும் யோசிச்சிக்கிட்டே இருந்த நிலையில “விஸ்வாசம்” பட ட்ரெய்லர திடீர்ணு வெளியிட்டாங்க படக்குழுவினர்.இந்த ட்ரெய்லர் வெளியான 12 நிமிஷத்துல சுமார் 1 மில்லியன் வியூஸ் அதிகமாச்சு. படத்துல சண்டைக் காட்சிகள்னு வநதுட்டாலே, எப்பவும் டூப் போடாம ரியல்லா ரிஸ்க் எடுத்து செய்வாரு.ஆனா இந்த விஸ்வாசம் படத்துல அதவிட நிறைய ரிஸ்க் எடுத்துருக்காரு.இன்னும் இந்த ஷூட்டிங் ஸ்பாட்க்குள்ள தல வந்தாலே தனி கெத்துதான். “ஜூனியர் ஆர்டிஸ்ட்”லிருந்து “கேம்ரா”வுக்கு பின்னால வேலை பார்க்குற எல்லார் கிட்டயும் சாப்ட்டிங்களா? நல்லா இருக்கீங்களா ?அப்படின்னு அன்போட நடந்துக்குறதுல நம்ம “தல”ய அடிச்சிக்க ஆளே இல்லனுதான் சொல்லனும்.அது இநத விஸ்வாசம் படத்துல கொஞ்சம் நிறையவே இருந்ததாம்.இன்னொரு விஷயம் , வழக்கமா பெணகளுக்கு அதிகமா மரியாதை கொடுப்பவர் நம்ம “தல”. அது எப்படின்னா , அவருடைய ஒவ்வொரு படமும் வெளிவரதுக்கு முனனால திருப்பதி கோவிலுக்கு போவாராம். அப்படி ஒரு சமயம் கோவில்ல இவருக்கு பின்னால பெண்கள் நின்னுகிட்டு இருந்திருக்காங்க, அவங்ககிட்ட நீஙக முன்னால போங்கனு வழிவிட்டு கடைசியா தான் போனாராம் நம்ம “தல”. எத்தனை படம் வந்தாலும், மண் வாசனை மாறாம “தல” ஸ்டைல்ல ஒரு படம் வந்தா பட்டைய கிளப்பும். அந்த வாசம் “விஸ்வாசம்” படத்துல நல்லாவே இருக்கு.பொதுவா ஒரு படம் வெளியானா ரசிகர்கள் எல்லாரும் “ப்ளக்ஸ்” வைக்குறது, “பேனர்” கட்டுறதுனு ஆர்வமா இருப்பாங்க. ஆனா “தல” ரசிகர்கள் படத்தோட “ட்ரெய்லர்”க்கே ப்ளக்ஸ்லாம் வச்சு, தியேட்டர்ல போய் பாத்துருக்காங்க.அப்புறம் லேடி சூப்பர் ஸ்டார் கிராமத்து பெண்ணா வராங்க.ம்ம்ம்ம்!!!! இதுகு மேல என்ன வேணும்? அதுவும் இந்த படத்துல “வேட்டி கட்டு”னு ஒரு பாடல் இருக்கு, நம்ம “தல” அதுல தன் உடம்புல இருக்குற வலிய கூட பொருட்படுத்தாம தன்ன நம்பி வர ரசிகர்களுக்காகவே நடனம் ஆடிருக்காரு.இந்த மாதிரி நிறைய சொல்லிக்கிட்டே போகலாம்.இதெல்லாம் படத்த தியேட்டர்ல போய் பார்க்கும்போது தான் அதல்லாம் ரசிக்கமுடியும்.ஆகவே இந்த பொங்கல “தல” அவர்களோட விஸ்வாசம் படத்த பார்த்து விசில் அடிச்சு கொண்டாடலாம்.

Watch Video here