இனிமே தான் நமக்கு வரம்!

NO PLASTIC_RJ PRIYANKA

மனிதன் பிறக்கிறான், வளர்கிறான், பிறர் பேசும் அளவிற்கு வாழ்வில் உயர கடினமாய் உழைக்கிறான். சந்தோஷம் அடைய பல வழிகளை கண்டறிந்தாலும் அவனால் சாகா வரத்தை பெறுவதை மட்டும் கண்டறிய முடியவில்லை.ஆனால் மனிதனால் முடியாததை பிளாஸ்டிக்கினால் முடிந்ததை எண்ணி கவலையுற்றாலும் இறுதியில் மனிதனே வெற்றி அடைவான்.

இயற்கையான காற்று , ஆரோக்கியமான உணவு , வீட்டு திண்ணையில் வெட்டி பேச்சு , இணையம் இல்லாமல் இணைந்த நட்பு , காதல் , சந்தைக்கு சென்று துணிப்பை அல்லது கூடையில் பொருட்களை வாங்கின சந்தோஷங்கள் என , இதெல்லாம் நம் வீட்டில் உள்ள யாரோ ஒருவர் அனுபவித்திருப்பார்கள். படிக்கும் பொழுது பொறாமையாக இருந்தாலும், முன்னோர்கள் அனுபவித்த அந்த வசந்தமான காலங்களை நாமும் அனுபவிக்க முடியும் மற்றும் இயற்கையின் வரத்தையும் பெற முடியும்.எல்லாம் சரி…இது எப்போது சாத்தியம்? அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே!

கடைக்கு போய் எதாவது பொருள் வாங்கினா, கவர் வேணுமா சார்ணு கேட்டா , ம்ம்ம்…கொடுங்க என்று நாமே காசு கொடுத்து, இயற்கையை காவு கொடுத்த காலத்தை இந்த 2018ம் வருடத்தோடு ஒழிப்போம்,

வரும் சந்ததியினருக்கு நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையை கற்று கொடுப்போம்,
மாற்றத்தை இன்றிலிருந்து, இப்போதிலிருந்து துவங்குவோம்.

(Visited 9 times, 1 visits today)
Share on
Views:
56
Article Categories:
சமூகம்

Comments are closed.

Subscribe
Subscribe