குழந்தையை எதிர்பார்த்து இருந்த கர்ப்பிணி கிடைத்ததோ எய்ட்ஸ்

குழந்தையை எதிர்பார்த்து இருந்த கர்ப்பிணி… கிடைத்ததோ எய்ட்ஸ்!

கனவுகள் ஒரு நாள் நிறைவேறும் என்ற நம்பிக்கை எல்லாருக்கும் உண்டு.

வரும் காலம் வசந்த காலம் என்ற ஒரு கனவு, கருவில் இருக்கும் அனைத்து குழந்தைகளும் எதிர்பார்க்கும், தன் அம்மாவோடு இணைந்து !

அது போல் தான் விருதுநகர், சாத்தூர்-ல்

ஒரு அம்மாவின் கனவும் கூட, வரவிருக்கும் குழந்தையை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தாள் , ஆனால் கிடைத்த பதிலோ அவளுக்கு HIV வைரஸ் தாக்கி உள்ளது என்று.

அரசிற்கு அலட்சியம் ஒன்னும் புதிதல்ல , மனிதர்களுக்கும் கூட தான்.

(HIV)ரத்த தானம் குடுத்து அவள் சுமந்து வந்த இரத்தின கட்டியை உடைத்து எரிந்து விட்டான் .

2 மாதங்களில் உன்னை அனைவரும் புன்னகையோடு வரவேற்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த உன் கனவை கயவனின் இரத்தம் 2 நிமிடங்களில் கலைத்து உன் வருகையை நிலைகுலைய செய்து விட்டது .

ரத்தம் குடுக்கும் பொழுது அலட்சியம்.அதை பரிசோதனை செய்யாமல் கர்ப்பிணிக்கு செலுத்தியது என ஒரு கணம் யோசிக்காமல் செய்யும் வேலை , பலரின் கனவுகளை சிதைத்து விடுகிறது.

இது தொடர்கதை ஆகுமோ ? என்ற கேள்விக்கும் நம்மிடம் தான் பதில் உள்ளது.

1 thought on “குழந்தையை எதிர்பார்த்து இருந்த கர்ப்பிணி… கிடைத்ததோ எய்ட்ஸ்!

Comments are closed.