உங்க காதல் ரொம்ப போர் அடிக்குதா ?

எந்த விஷயத்த ஆரம்பிச்சாலும் ஆர்வமா ஆரம்பிப்போம் !
புது துணி போடும் போது, புது மொபைல் வாங்கும் போது , புது வண்டி வாங்கும் போது , இப்படி வடிவேல் சொல்ற மாதிரி லிஸ்ட் பெருசா போயிட்டே இருக்கும் .
வந்த புதுசுல இருந்த ஆர்வங்கள் , வழக்க படுத்திக்கொள்ளும் போது எல்லாமே பழசாகிடும் .இதே மாதிரி தான் நம்ம உறவுகளும் .
நமக்கு பிடிச்சவங்க, இல்லனா நம்மள பிடிச்சவங்க, ஆரம்பத்துல நமக்கு பிடிச்சத மட்டும் பண்ணுவாங்க , அப்புறம் கொஞ்ச நாள்ல அந்த ஆர்வமும் படிப்படியா குறைஞ்சுடும் . இதெல்லாம் ஏன் நடக்குதுனு கேட்டா யார்கிட்ட இருந்தும் ஒழுங்கான பதில் கிடைக்காது.
இதுக்கெல்லாம் தீர்வு தான் என்ன ?
தினமும் வேலை செய்கிறோம் , சாப்பிடறோம் , அதே மாதிரி உங்க அன்பானவங்களுக்கு பிடிச்ச விஷயத்த செய்ய ஒரு 10 நிமிஷமாச்சும் ஒதுக்குங்க… அப்போதான் உங்க காதல் எப்பவும் சலிப்பு தட்டாது .