பாரதி மீண்டும் வந்தால்…..???

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!”

சுப்பையா, முண்டாசு கவிஞன், மீசைக் கவிஞன் மற்றும் சக்தி தாசன் இப்படி பல பெயர்களுக்கு சொந்தக்காரர் தான் நம்ம மாககவி பாரதியார். 32 மொழிகள் தெரிஞ்சாலும்

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்”

என சொன்னவர். அச்சம் தவிர், ரௌத்திரம் பழகு இப்படி தன்னுடைய கவிதைகள்னால பல பேருக்கு தைரியத்த கொடுத்தவர்.

“பாதகம் செய்பவரைக் கண்டால் நீ
பயம் கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா”

என்று பிரச்சனைகளை பார்த்து பயந்து ஓடுங்குன பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்தவர்.

“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்”

என்று சொன்னவர். பசிக்காக ஏங்குன மனிதன கொன்றது இந்த சமூகம்.ஓரு வேளை சாப்பாட்டுக்காக ஏங்குன குழந்தைகள வேடிக்கை பார்த்து நின்னோம். அப்புறம் நம்ம சாப்பாட்ட நம்மலே வீணாக்குறோம்.

“ஓடி விளையாடு பாப்பா “ னு சொன்ன பாரதி இப்போ இருந்தா இந்த கால குழந்தைகள பார்த்து “எழுந்தாவது” விளையாடு பாப்பானுதா சொல்லுவார். மகாகவி பாரதியார பற்றி நிறைய பாடல்கள்ல, விளம்பரங்கள்ளலலாம் வந்துருக்கு. தமிழுக்காக மட்டும் வாழ்ந்த பாரதியார் அவர்கள மனசளவுல மட்டும் நினைக்காம அவரு எழுதுன பல கவிதைகள படிச்சி பாருங்க…அது போதும்!

அதோட என் தமிழ் நாடு, தமிழன்டா, தமிழ் தா என் மூச்சு, பேச்சுனு சொல்றவங்க, தமிழ் மேல அக்கறை உள்ளவங்க முடிஞ்ச அளவுக்கு நம்ம தமிழ பாதுகாத்து வையுங்க… தமிழராகிய நம்ம எல்லருக்குமே  நம்ம தமிழ அழியாம பாத்துகுறதுல முழு பங்கு இருக்கு அப்படிங்குறத மறக்க வேண்டாம்.

தமிழ் வாழ்க!