சின்னதம்பி

பாசத்த சம்பாதிச்ச சின்னதம்பி !

சின்னத்தம்பி உன்ன அள்ளி கொஞ்சற அளவுக்கு எனக்கு சக்தி இல்ல

ஆனா !

உன் தும்பிக்கைய முத்தமிட ஆசை…!

உன்ன தந்தத்தால குத்துன கும்கி ஆ நானும் ஆசை தீர குத்தி கோபத்த குறைக்கலாம் னு நெனச்ச , அந்த யானையும் கூட அன்பால நண்பனா ஆக்கிட்ட…

காட்டு யானைய பார்த்து பயந்து ஓடுன மக்கள், உன்ன தேடி வந்து கொஞ்சற அளவுக்கு நீ மாத்திட்ட,

யாரு பா நீ ?

எல்லார் மனசுலயும் இவ்ளோ சீக்கிரமா இடம் பிடிச்ச நீ

உனக்கு ஒரு நிரந்தரமான , நிம்மதியான , இடம் இல்லையே னு நெனச்சு வருத்தப்பட வைக்கிற.

உனக்கு பிடிச்ச இடத்த உன் அனுமதி இல்லாம எடுத்துக்கிட்டு எங்க மேல கோபத்த காமிக்காம பாசத்த சம்பாதிச்ச உன்ன , தொட்டு பார்த்து கொஞ்ச அனுமதி தருவாயா ?